search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    போக்கோ X5 ப்ரோ இந்திய வெளியீட்டு விவரம்!
    X

    போக்கோ X5 ப்ரோ இந்திய வெளியீட்டு விவரம்!

    • போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ரெட்மி நோட் 12 ஸ்பீடு எடிஷனில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கும் என தெரிகிறது.
    • புது போக்கோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம்.

    போக்கோ பிராண்டின் புது ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது. டிப்ஸ்டரான யோகேஷ் ரார் இந்திய சந்தையில் புதிய போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார். ஜனவரி அல்லது பிப்ரவரி மாத வாக்கில் போக்கோ X5 சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாகும் என போக்கோ தலைவர் ஹிமான்ஷூ டாண்டன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

    இதுதவிர போக்கோ X5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் வெளியாகி இருந்தது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றே கூறப்பட்டது. இந்த நிலையில், தான் போக்கோ X5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ஜனவரி மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என டிப்ஸ்டர் தெரிவித்து இருக்கிறார்.

    புதிய போக்கோ X5 ப்ரோ அம்சங்கள் ரெட்மி நோட் 12 ஸ்பீடு எடிஷன் மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் தான் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் போக்கோ X5 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என யோகேஷ் தெரிவித்து இருக்கிறார்.

    அம்சங்களை பொருத்தவரை போக்கோ X5 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் FHD+ OLED பேனல், 1080x2400 பிக்சல், 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    Next Story
    ×