search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    260வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்-ஐ அறிமுகம் செய்யும் இன்ஃபினிக்ஸ்
    X

    260வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்-ஐ அறிமுகம் செய்யும் இன்ஃபினிக்ஸ்

    • இன்ஃபினிகஸ் நிறுவனம் 260 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை தண்டர் சார்ஜ் என இன்ஃபினிக்ஸ் அழைக்கிறது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது ரியல்மி GT3 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்-ஐ விட அதிவேகமானது ஆகும். இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது 260 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

    புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படுமா அல்லது ஏற்கனவே அந்நிறுவனம் அறிமுகம் செய்த இன்ஃபினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா மாடலின் மாடிஃபைடு வெர்ஷனில் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இந்த ஆண்டு இறுதிக்குள் இன்ஃபினிக்ஸ் நிறுவனம் 260 வாட் சார்ஜர் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து விடும் என்றே தெரிகிறது.

    இதுதவிர இன்ஃபினிக்ஸ் நிறுவனம் 100 வாட் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் உருவாக்கி வருகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் அருகில் சார்ஜர் இடம்பெற்று இருக்கிறது. இதில் உள்ள ஸ்மார்ட்போன் 180 வாட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமான இன்ஃபினிக்ஸ் ஜீரோ அல்ட்ரா மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய 260 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டத்தில் நான்கு-வழி 100 வாட் சார்ஜ் பம்ப் மற்றும் AHB சர்கியூட் ஆர்கிடெக்ச்சர் மற்றும் சேஃப் சார்ஜிங் கண்ட்ரோல் இடம்பெற்று இருக்கும்.

    புதிய தொழில்நுட்பம் பற்றிய இதர விவரங்கள் மார்ச் 9 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. மேலும் இந்த வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இதுதவிர இன்ஃபினிக்ஸ் உருவாக்கி வருவதாக கூறப்படும் 100 வாட் வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டத்தில் கஸ்டம் காயில் டிசைன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: GSMArena

    Next Story
    ×