1.91 இன்ச் கியூட் டிஸ்ப்ளே.. அசத்தல் லுக்.. விலை எவ்வளவு தெரியுமா?

பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது.லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச்-இல் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் உள்ளது.
1.91 இன்ச் கியூட் டிஸ்ப்ளே.. அசத்தல் லுக்.. விலை எவ்வளவு தெரியுமா?
Published on

ஃபயர் போல்ட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் "லுமோஸ்" (Lumos) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த சொலரிஸ் மற்றும் சொலெஸ் மாடல்களுடன் இணைகிறது. புதிய ஃபயர் போல்ட் லுமோஸ் மாடலில் 1.91 இன்ச் டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங், உடல்நல அம்சங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள டிஸ்ப்ளே HD ஸ்கிரீன், 240x280 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் 100-க்கும் அதிகமான கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. இத்துடன் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு ப்ளூடூத் காலிங் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை பயன்படுத்த முடியும்.

புதிய லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச்-இல் ஃபயர் போல்ட் ஹெல்த் சூட் உள்ளது. இதில் ஹார்ட் ரேட் டிராக்கிங், SpO2 டிராக்கிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. கூடுதல் அம்சங்களாக ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன், பில்ட்-இன் கேம்ஸ் உள்ளன.

இவைதவிர வானிலை அப்டேட்கள், கால்குலேட்டர், மியூசிக், கேமரா கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. புதிய ஃபயர் போல்ட் லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச் ரோஸ் கோல்டு, சில்வர், புளூ, பிளாக் மற்றும் கோல்டு என ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கின்றன. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஃபயர் போல்ட் வலைத்தளங்களில் நவம்பர் 30-ம் தேதி துவங்குகிறது.

இந்திய சந்தையில் புதிய ஃபயர் போல்ட் லுமோஸ் ஸ்மார்ட்வாட்ச் ரூ. 1499 எனும் விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இது அறிமுக விலை என்பதால், எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com