Vivo | 7200mAh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
Vivo | 7200mAh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த விவோ T4x ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக வெளியாகி உள்ளது. புதிய விவோ T5x ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 டர்போ பிராசஸர், மாலி G615 MC2 GPU, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓ.எஸ். 6 கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

விவோ T5x அம்சங்கள்:

6.76 இன்ச் 2408x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 டர்போ பிராசஸர்

மாலி G615 MC2 GPU

6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓ.எஸ். 6

50MP பிரைமரி கேமரா

2MP டெப்த் கேமரா

32MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

யு.எஸ்.பி. டைப் சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

மிலிட்டரி கிரேடு டியுரபிலிட்டி, டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.4, யு.எஸ்.பி. டைப் சி 2.0

7200 mAh பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை விவரங்கள்:

விவோ T5x 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 18,999

விவோ T5x 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 20,999

விவோ T5x 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 22,999

விவோ T5x 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்டார் சில்வர், சைபர் கிரீன் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோரில் வருகிற மார்ச் 24-ஆம் தேதி தொடங்குகிறது.

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஆக்சிஸ், ஹெச்.டி.எஃப்.சி. மற்றும் எஸ்.பி.ஐ. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போதும் அல்லது யு.பி.ஐ. பரிவர்த்தனை செய்யும் போதும் ரூ. 2,000 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இத்துடன் 6 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஜியோவின் ரூ. 1,199 பிரீபெயிட் ரீசார்ஜ் செய்யும் போது ஆறு மாதங்களுக்கு பத்து ஓ.டி.டி. தளங்களுக்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com