Samsung foldable smartphone | கேலக்ஸி Z ஃபோல்ட் 8 ஸ்மார்ட்போன் வடிவமைப்பு அறிமுகம்

கேலக்ஸி ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள், கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Foldable smartphone
Published on

சாம்சங் நிறுவனம் தனது அடுத்ததலைமுறை படைப்பான ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த மாதம் நடைபெறவுள்ள கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில், கேலக்ஸி Z ஃபோல்ட் 8 மற்றும் கேலக்ஸி Z ஃபிளிப் 8 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் வலைதளங்களில், பீட்சா துண்டுகள், சாக்லேட் பார்கள், புதிர்கள், டல்கோனா மிட்டாய் மற்றும் தாஜ்மஹால் போன்ற ஸ்மார்ட்போன் வடிவத்தை பகிர்ந்துள்ளது.

ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை மேம்படுத்துவதற்கான தனது தொடர்ச்சியான நோக்கத்தை இந்த முன்னோட்டங்கள் பிரதிபலிப்பதாக சாம்சங் கூறியுள்ளது.

இதையடுத்து ஜூலை 22 அன்று நடைபெறவுள்ள கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில், கேலக்ஸி Z ஃபோல்ட் 8 சீரிஸை, சாம்சங் நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com