

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய ரெட்மி 15A 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.9 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், டி.யு.வி. ரெய்ன்லாந்து சான்று, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் யுனிசாக் T8300 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், கூடுதலாக 6 ஜி.பி. ரேம் எக்ஸ்பான்ஷன் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓ.எஸ். 3 கொண்டிருக்கிறது.
மேலும், இது 4 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 6 ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 6300mAh பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் ஸ்மார்ட்போன் வாங்கும் போதே சார்ஜரும் வழங்கப்படுகிறது.
ரெட்மி 15A 5ஜி அம்சங்கள்:
6.9 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் யுனிசாக் T8300 பிராசஸர்
Arm Mali-G57 MC2 GPU
4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓ.எஸ்.
டூயல் சிம் ஸ்லாட்
32MP பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4
யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
6300mAh பேட்டரி
15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய ரெட்மி 15A 5ஜி ஸ்மார்ட்போன் ஆசம் புளூ, அமேஸ் பர்பில் மற்றும் ஏஸ் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,499 என்றும் டாப் எண்ட் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி 15A 5ஜி விற்பனை ஏப்ரல் 03-ஆம் தேதி முதல் சியோமி இந்தியா மற்றும் ப்ளிப்கார்ட் வலைத்தளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் துவங்குகிறது.