

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. ரியல்மி P4 லைட் 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 144 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 8 ஜி.பி. வரை டைனமிக் ரேம் மற்றும் ரேம் எக்ஸ்பான்ஷன் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி யு.ஐ. 7 ஓ.எஸ். கொண்டுள்ளது. புகைப்படங்கள் எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மற்றும் ஆர்மர் ஷெல் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி P4 லைட் 5ஜி அம்சங்கள்:
6.8 இன்ச் 1570x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். எல்.சி.டி. ஸ்கிரீன்
ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர்
Arm மாலி G57 MC2 GPU
4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி யு.ஐ. 7
13MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
5MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்,
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP64)
மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (MIL-STD 810H)
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யு.எஸ்.பி. டைப் சி
7000mAh பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை விவரங்கள்:
புதிய ரியல்மி P4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட், ரியல்மி இந்தியா வலைத்தளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோரில் மார்ச் 25-ஆம் தேதி தொடங்குகிறது.