Realme | 50MP செல்ஃபி கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்?

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் வெளியிடப்பட்டது.
Realme | 50MP செல்ஃபி கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்?
Published on

ரியல்மி நிறுவனம் விரைவில் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் ரியல்மி 16 5ஜி என அழைக்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்திய சந்தையிலும் அறிமுகமாகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 6 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் ரியல்மி 16 சீரீசில்- ரியல்மி 16 5ஜி மற்றும் ரியல்மி 16T 5ஜி என இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனில் 6.57 இன்ச் HFD+ Flexible AMOLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6400 டர்போ பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

புகைப்படங்கள் எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 50MP வைடு ஆங்கில் சென்சார், 2MP மோனோக்ரோம் சென்சார் மற்றும் 50MP செல்ஃபி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com