8000mAh பேட்டரியுடன் பட்ஜெட் பிரிவில் புது ஒன்பிளஸ் போன் அறிமுகம்!

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
8000mAh பேட்டரியுடன் பட்ஜெட் பிரிவில் புது ஒன்பிளஸ் போன் அறிமுகம்!
Published on

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய N6 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 25,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய N6 சீரிஸ் மாடலில் 8000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் மூன்று நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் 45 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு ஸ்மார்ட்போனை கொண்ட அன்றாட அக்சஸரீக்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

ஒன்பிளஸ் N6 அம்சங்கள்:

6.8 இன்ச் 1570x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்

மீடியாடெக் டிமென்சிட்டி 6360 அபெக்ஸ் பிராசஸர்

Arm மாலி-G57 MC2 GPU

4 ஜிபி, 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 16

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா

8MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

யுஎஸ்பி டைப் சி ஆடியோ

டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி

5ஜி SA / NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.4

யுஎஸ்பி டைப் சி

8000mAh பேட்டரி

45வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங், 5 வாட் ரிவர்ஸ் சார்ஜிங்

விலை விவரங்கள்:

ஒன்பிளஸ் N6 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22,999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விிலை ரூ. 24,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 04-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது.

அறிமுக சலுகையாக புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2000 வரை உடனடி தள்ளுபடி, அதிகபட்சம் 6 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் பிரைம் டே பிரத்யேக சலுகையாக ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com