

நத்திங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய போன் 4b ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய போன் 4 சீரிஸ் என்ட்ரி லெவல் மாடல் என்பதை நத்திங் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என்பது உள்பட இதன் அம்சங்கள் சிலவற்றையும் நத்திங் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில், நத்திங் நிறுவனம் புதிய போன் 4b ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஸ்பெஷல் எடிஷன் மாடல் நத்திங் போன் 4b RCB எடிஷன் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனும் ஜூலை 07-ஆம் தேதியே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நத்திங் போன் 4b மாடலில் குவால்காம் நிறுவனத்தின் பிராசஸர், பின்புறம் ஃபிளாட் ரியர் பேனல், டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என நத்திங் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் பின்புறத்தில் க்ளிஃப் பார் மற்றும் பிரத்யேக சிவப்பு நிற ரெக்கார்டிங் எல்இடி வழங்கப்படுகிறது.
நத்திங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
இதுகுறித்து டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டுள்ள தகவல்களில் நத்திங் போன் 4b ஸ்மார்ட்போன் நான்குவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த மாடல் மூன்று நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.