5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான லாவா ஸ்மார்ட்போன்

லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. லாயா யுவா 2 ப்ரோ மாடலில் மீடியாடெக் ஹிலியோ G37 பிராசஸர், 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான லாவா ஸ்மார்ட்போன்
Published on

லாவா நிறுவனம் இந்திய சந்தையில் யுவா 2 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லாவா யுவா 2 ப்ரோ மாடலில் 6.5 இன்ச் HD+ டிஸப்ளே, மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் லாவா யுவா 2 ப்ரோ 13MP பிரைமரி கேமரா, விஜிஏ டெப்த் கேமரா, மற்றொரு விஜிஏ கேமரா, 5MP செல்ஃபி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

லாவா யுவா 2 ப்ரோ அம்சங்கள்:

6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர்

IMG PowerVR GE8320 GPU

4 ஜிபி ரேம்

64 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 12

டூயல் சிம் ஸ்லாட்

13MP பிரைமரி கேமரா

விஜிஏ டெப்த் கேமரா, விஜிஏ கேமரா, எல்இடி ஃபிளாஷ்

5MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0

யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி

10 வாட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

லாவா யுவா 2 ப்ரோ மாடலில் கிளாஸ் வைட், கிளாஸ் கிரீன் மற்றும் கிளாஸ் லாவெண்டர் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை லாவா வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com