3 நாளுக்கு சார்ஜ் போட வேண்டாம்... 11,000mAh பேட்டரியுடன் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போன் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.
3 நாளுக்கு சார்ஜ் போட வேண்டாம்... 11,000mAh பேட்டரியுடன் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

ஹானர் பிராண்டின் முற்றிலும் புதிய X80 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அதில் 11,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான ஹானர் பிராண்டு ஸ்மார்ட்போன்களில் அதிக பேட்டரி கொண்ட மாடலாக X80 ப்ரோ அமைந்துள்ளது.

மேலும், இதில் உள்ள டிஸ்ப்ளே அதிகபட்சம் 10,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.8 இன்ச் 1.5K LTPS AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 10,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட ஸ்கிரீன், IP68+IP69+IP69K டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 சிப்செட், அட்ரினோ 812 ஜிபியு, அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 10X டிஜிட்டல் ஜூம், OIS, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 6, BeiDou, GPS, GLONASS, Galileo, QZSS, NavIC உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 11,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் கிராவிட்டி சென்சார், ஐ.ஆர். பிளாஸ்டர், கைரேகை சென்சார், கைரோஸ்கோப் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹானர் X80 ப்ரோ ஸ்மார்ட்போனின் துவக்க விலை இந்திய மதிப்பில் ரூ. 28,000 ஆகும். இது லைட்னிங் ரெட், மூன்லைட் வைட், மிஸ்டிக் பிளாக் மற்றும் வைப்ரண்ட் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை சீன சந்தையில் ஜூன் 26-ஆம் தேதி தொடங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com