ரெட்மி நோட் 5 போட்டியாக விரைவில் வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட லெனோவோ திட்டமிட்டுள்ளது.
ரெட்மி நோட் 5 போட்டியாக விரைவில் வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் மார்ச் 20-ம் தேதி எஸ் சீர்ஸ் பெயரில் புதிய் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக லெனோவோ தெரிவித்துள்ளது. புதிய லெனோவோ ஸ்மார்ட்போன் லெனோவோ எஸ்5 என அழைக்கப்பட இருக்கிறது. 

சியோமி தலைமை செயல் அதிகாரியான லெய் ஜூன் சக்திவாய்ந்த ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் சீனாவில் மார்ச் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என வெய்போ மூலம் தெரிவித்திருந்தார். இத்துடன் சிவப்பு நிற ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார். 

புகைப்படங்களில் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார், மெட்டல் பாடி, ஆன்டெனா கோடுகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் அவர் பகிர்ந்து கொண்டிருந்த புகைப்படங்களில் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் 18:9 2.5D  வளைந்த கிளாஸ் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. 

இது லெனோவோ K520 ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5.65 இன்ச் FHD பிளஸ், ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. 

லெனோவோ K520 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 5.65 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் 

- அட்ரினோ 506 GPU

- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்

- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

- டூயல் பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்

- முன்பக்கம் செல்ஃபி கேமரா

- கைரேகை சென்சார்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

லெனோவோ எஸ்5 (K520) ஸ்மார்ட்போன் கருப்பு, சிவப்பு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. எனினும் ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் மார்ச் 20-ம் தேதி தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com