ரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #Smartphone
ரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
Published on

கூல்பேட் மெகா 5ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆஃப்லைன் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, குவாட்-கோர் ஸ்ப்ரெட்ரம் SC9850K பிராசஸர், 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, ஃபிளாஷ், 0.3 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மெகா 5ஏ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

கூல்பேட் மெகா 5ஏ சிறப்பம்சங்கள்:

- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்ப்ரெட்ரம் SC9850K பிராசஸர்

- மாலி 400 GPU

- 2 ஜிபி ரேம்

- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ

- டூயல் சிம் ஸ்லாட்

- 8 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

- 0.3 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா

- 5 எம்பி செல்ஃபி கேமரா

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

கூல்பேட் மெகா 5ஏ ஸ்மார்ட்போன் தங்க நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ஆஃப்லைன் முறையில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க இன்று (ஆகஸ்டு 16) முதல் தமிழ் நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி, உத்திர பிரதேசம், அரியானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com