AirPods Max 2 | ரூ. 67,900 தான்... புது ஹெட்போன் அறிமுகம் செய்த ஆப்பிள் - என்ன ஸ்பெஷல்?

AirPods Max 2 | ரூ. 67,900 தான்... புது ஹெட்போன் அறிமுகம் செய்த ஆப்பிள் - என்ன ஸ்பெஷல்?
Published on
Summary

இந்தியா உள்பட உலகின் 30 நாடுகளில் முன்பதிவு செய்யப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2 (AirPods Max 2) ஓவர்-இயர் ஹெட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது. இது ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020-ஆம் ஆண்டு அறிமுகம் செய்த ஏர்பாட்ஸ மேக்ஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

புதிய மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் H2 சிப்செட், மேம்பட்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மேம்பட்ட ஆடியோ ஹார்டுவேர், முந்தைய ஒரிஜினல் ஏர்பாட்ஸ் மேக்ஸ் மாடலில் இல்லாத மென்பொருள் அம்சங்கள் புதிய ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2 மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஹெட்போன் மேம்பட்ட ஆடியோ பிராசஸிங் செய்வதற்காக முற்றிலும் புதிய ஹை டைனமிக் ரேஞ்ச் ஆம்ப்ளிஃபயர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தெளிவான ஆடியோ அவுட்புட் வழங்குவதை உறுதி செய்கிறது. இந்த ஹெட்போனை யு.எஸ்.பி. சி கேபிள் மூலம் இணைக்கும் போது, 24-பிட், 48kHz வரை லாஸ்லெஸ் ஆடியோ கிடைக்கும். இசைத்துறையில் இருப்பவர்கள் வயர்டு இணைப்பில் தனிப்பட்ட ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் ஹெட் டிராக்கிங் செய்ய அனுமதிக்கிறது.

புதிய ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2 மாடலில் உள்ள H2 சிப்செட் புதிய தானியங்கி மற்றும் மென்பொருள் சார்ந்த அம்சங்களை வழங்குகிறது. அதன்படி இந்த ஹெட்போனில் அடாப்டிவ் ஆடியோ, கான்வெர்சேஷன் அவேர்னஸ், வாய்ஸ் ஐசோலேஷன், லைவ் டிரான்ஸ்லேஷன் உள்பட பல்வேறு மென்பொருள் சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஹெட்போன் பயன்பாட்டை மேம்படுத்துகிறது.

இந்திய சந்தையில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2 விலை ரூ. 67,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஹெட்போனிற்கான முன்பதிவு இந்்தியா உள்பட உலகின் 30 நாடுகளில் வருகிற மார்ச் 25-ஆம் தேதி தொடங்குகிறது. முன்பதிவு ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது ஆப்பிள் ஸ்டோர் செயலி மூலம் மேற்கொள்ளலாம். விநியோகம் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com