Amazon PrimeDay | சாம்சங் s25, ஒன்பிளஸ் 15&15R, நத்திங் ஸ்மார்ட்ஃபோன்களின் விலை குறைப்பு

இந்தியாவில் அமேசான் ‘பிரைம் டே’ விற்பனை ஜூலை 4 தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.
Amazon Prime Day Deals
Published on

அமேசான் ‘பிரைம் டே’ விற்பனை:

இந்தியாவில் அமேசான் ‘பிரைம் டே’ தனது 10-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, மெம்பர்ஷிப் பயனாளர்களுக்கு (ஆண்டு பிரைம் சந்தா ₹1,499-க்கு பதிலாக ₹999 உட்பட) 50% வரை தள்ளுபடி வழங்கி, 500-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளையும் அறிமுகம் செய்கிறது.

இந்தியாவில் அமேசான் ‘பிரைம் டே’ விற்பனை ஜூலை 4-ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு தொடங்கி ஜூலை 6-ஆம் தேதி இரவு 11:59 மணி வரையில் நடைபெற உள்ளது.

ஸ்மார்ட்போன் வாங்குபவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிரடியான விலை குறைப்புகளையும் சலுகைகளையும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samsung s25 FE விலை குறைப்பு:

இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டு வெளியான சாம்சங் கேலக்ஸி s25 FE 8 ஜிபி ரேம்+128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல், ரூ.60,000 விலையில் அறிமுகமானது.

இதன் விலையில் தற்போது 23% தள்ளுபடி செய்யப்பட்டு, ரூ.46,200-க்கு அமேசான் பிரைம் டே-வில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Oneplus 15&15R விலை குறைப்பு:

இதேபோன்று ஒன்பிளஸ் நிறுவனமும், தனது 15 மற்றும் 15R மாடல்களில் விலையை குறைத்துள்ளது. அதன்படி ஒன்பிளஸ் 15R, 12ஜிபி+256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.54,999 விற்பனைக்கு வர உள்ளது.

அமேசான் பயனாளர்கள் ஆக்சிஸ் மற்றும் எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு சலுகைகள் மூலம் ரூ.3,000 வரை தள்ளுபடி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nothing Phone 4A Pro விலை குறைப்பு:

நத்திங் ஃபோன் 4A ப்ரோ பிரீமியம் பட்ஜெட் பிரிவில் பல ஸ்மார்ட்ஃபோன்களுக்கு போட்டி ஏற்படுத்தும் வகையில், ரூ.34,997 என்று ஆரம்ப விலையாக நிர்ணயித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com