என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "news anchor"

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • 16 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

    1980 மற்றும் 90-களில் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி மிகவும் பிரபலமானவர் சரளா மகேஸ்வரி. அவரது குரல்வளம், தெளிவான உச்சரிப்பு மற்றும் செய்தி வழங்கும் முறைக்காக மக்களிடையே மிகவும் ஐக்கியமானவர்.

    கறுப்பு-வெள்ளை தொலைக்காட்சி காலத்திலிருந்து வண்ணத் தொலைக்காட்சி காலம் வரை தூர்தர்ஷனில் அவர் ஒரு முக்கிய முகமாக இருந்தார். செய்தி வாசிப்பாளர் மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என பன்முகங்களைக் கொண்டவர் சரளா மகேஸ்வரி. மேற்கு வங்கத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 16 புத்தகங்களை எழுதியுள்ளார்.

    இந்நிலையில் 71 வயதான அவர் இன்று டெல்லியில் காலமானதாக கூறப்படுகிறது.  அவரது மறைவிற்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாயப் பிம்பத்தின் மூலம் செய்தி வாசிக்கும் முறையை உலகில் முதன்முறையாக சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. #firstAInewsanchor #tAInewsanchorinChina
    பீஜிங்:

    அனைத்து துறைகளிலும் மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றுவதற்கு ரோபோட்களை உருவாக்கியுள்ள சீனாவில் தற்போது சர்வதேச இணைய கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

    இந்த கருத்தரங்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாயப் பிம்பத்தின் மூலம் செய்தி வாசிக்கும் முறையை உலகில் முதன்முறையாக சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

    சீனாவின் பிரபல செய்தி நிறுவனமான சின்ஹுவா தொலக்காட்சி நிலையத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் பணியமர்த்தப்பட்டுள்ள ‘ஹி’ எனப்படும் அந்த உயிரில்லாத செய்தி வாசிப்பாளர், ஆணின் முக அமைப்புடனும் குரலுடனும்  காணப்படுகிறார்.

    அச்சுவடிவில் எழுத்துக்களாக வரும் செய்திகளை குரல் வடிவில் வாசிக்கும் இந்த மாயப் பிம்பம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட சாதனையாக கருதப்படுகிறது.

    பின்னணியில் வெளியாகும் வீடியோ காட்சிகளை உள்வாங்கி, அதற்கேற்ப உயிருள்ள நபர்களைப் போலவே குரலில் ஏற்ற இறக்கத்துடனும், முகபாவத்துடனும் தேவைப்படும் நேரங்களில் அளவான கண்ணசைவுகளுடனும் செய்தி வாசிக்கும் இந்த ‘ஹி’யால் ஒருநாளின் 24 மணி நேரமும் ஆண்டின் அனைத்து நாட்களிலும் சோர்வின்றி செய்தி வாசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் இன்னும் சில ஆண்டுகளில் நமக்கெல்லாம் வேலை இல்லாமல் போய்விடும் என சில செய்தி வாசிப்பாளர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். #firstAInewsanchor #tAInewsanchorinChina
    ×