என் மலர்
நீங்கள் தேடியது "Mojtaba Khamenei"
- அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார்.
- ஈரானின் தற்போதைய மூன்றாவது உச்ச தலைவர் ஆவார்.
அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, ஈரானின் நிபுணர்கள் சபை அவரது 56 வயது மகன் மொஜ்தபா கமேனியை புதிய உச்ச தலைவராக நியமித்தது.
இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா கமேனி காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், அவரது காயங்களின் தீவிரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே தற்போதைய இந்தப் போரை ஈரானிய ஊடகங்கள் ரமலான் போர் எனக் குறிப்பிடுவதாகவும், 'ஜன்பாஸ்' என மொஜ்தபா கமேனியை அழைப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல் ஈரானின் அடிப்படை அமைப்பை மொத்தமாக முடக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில், கமேனியுடன் சேர்ந்து, அவரது மனைவி, மகள், மருமகன், மருமகள் மற்றும் குறைந்தது ஒரு பேரக்குழந்தை உட்பட பல குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நிலையில் தற்போது அவரது மகனுக்கு குறிவைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர் உச்சத் தலைவர் என அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை என்பதால் காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.






