உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் vs டிங் லிரென் - 'டிரா'வில் முடிந்த 5வது சுற்று

40-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிந்தது.7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்
உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் vs  டிங் லிரென் -  'டிரா'வில் முடிந்த 5வது சுற்று
Published on

இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் 3 சுற்றுகள் முடிவில் இருவரும் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என 1.5 புள்ளிகள் பெற்றனர். நேற்று முன் தினம் நடந்த 4-வது சுற்று டிராவில் முடிந்தது.

4 போட்டிகளில் இருவரும் தலா 2 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில் நேற்று 5 வது சுற்று நடைபெற்றுள்ளது. இதில் டிங் லிரென் கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடனும் விளையாடினர்.

22 நகர்த்தல் வரை ஆட்டம் சமநிலையில் இருந்தது. 23வது நகர்த்தலில் குகேஷ் சற்று சறுக்கினார். ஆனால் அடுத்தடுத்த நகர்த்தலில் அவர் மீண்டு வந்த நிலையில் 40-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிந்தது.

எனவே ஐந்து சுற்றுகள் முடிவில், குகேஷ் மற்றும் டிங் லிரென் ஆகிய இருவரும் 2.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மொத்த  பரிசுத்தொகை ரூ.21 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com