

2026 தொடர் தொடங்கி தொடங்கி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இத்தொடரில் இருந்து ஏற்கனவே சென்னை அணி வெளியேறியிருந்தாலும், தற்போது அவ்வணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
கடந்த 2 வருடங்களாக சென்னை அணி ஜெயிக்காவிட்டாலும், தோனியின் தரிசனம் ரசிகர்களுக்கு ஒருவித ஆறுதலை தந்தது. ஆனால் இந்த வருடம் அதுவும் இல்லாமல் போனது. இதனால் ஐபிஎல்லில் அவரின் ஓய்வு குறித்த யூகங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எம்.எஸ். தோனியின் எதிர்காலம் குறித்த எந்தவொரு முடிவும் அவரையே முழுமையாகச் சார்ந்தது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
மேலும் அவர் ஒரு வீரராக, பயிற்சியாளராக அல்லது வழிகாட்டியாக என எந்தப் பொறுப்பில் வேண்டுமானாலும், சிஎஸ்கே அணியில் ஒரு நிரந்தர அங்கமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் விரும்புவோம் என தெரிவித்துள்ளார். RevSportz-க்கு அவர் அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்தார்.
தன்னுடைய கடைசிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் என தோனி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.