பிரான்ஸ்: கால்பந்து வெற்றிக் கொண்டாட்டங்களில் வெடித்த வன்முறை.. 400-க்கும் மேற்பட்டோர் கைது

பிஎஸ்ஜி அணி 4-3 என வெற்றி பெற்றது.
பிரான்ஸ்: கால்பந்து வெற்றிக் கொண்டாட்டங்களில் வெடித்த வன்முறை.. 400-க்கும் மேற்பட்டோர் கைது
Published on

ஐரோப்பாவின் கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் இங்கிலாந்தின் ஆர்செனல் அணியும், பிரான்சின் பிஎஸ்ஜி அணியும் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் ஆர்செனல் 1-0 என முன்னிலை வகித்தது. போட்டியின் 64ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் டெம்பெலே கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். இறுதியில் பிஎஸ்ஜி அணி 4-3 என வெற்றி பெற்றது.

பிரான்ஸ் முழுவதும் பிஎஸ்ஜி ரசிகர்கள் வீதிகளில் திரண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற 'சாம்ப்ஸ்-எலிசிஸ்' வீதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

அப்போது ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

இதை தொடர்ந்து கலவரம் வெடிக்க, பைக்குகள் வீதியில் வைத்து எரிக்கப்பட்டன. கடைகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த கலவரங்களால் பாரிஸில் பஸ் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டின.

இன்று அதிகாலை வரை பிரான்ஸ் முழுவதும் 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாரிஸில் மட்டுமே 280 பேர் அடங்குவர். வன்முறையில் 7 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com