புரோ கபடி லீக்- பெங்களூரு அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி

2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
புரோ கபடி லீக்- பெங்களூரு அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி
Published on

புனே:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன.

புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த தொடரில் நேற்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய பெங்கால் வாரியர்ஸ் அணி 44-29 என்ற புள்ளிகள் கணக்கில வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com