மிட்செல் மார்ஷ் அதிரடி... 221 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ - ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யுமா ராஜஸ்தான்?

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது லக்னோ அணி.
மிட்செல் மார்ஷ் அதிரடி... 221 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ - ஃப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யுமா ராஜஸ்தான்?
Published on: 

ஐபிஎல் 2026 தொடரின் 64-வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் சதம் அடிக்க இருந்தநிலயில், 96 ரன்களில் 20 ஓவரில் ரன் அவுட் ஆனார். அவருக்கு அடுத்து ஜோஸ் இங்கிலிஸ் 60 ரன்கள் அடித்தார்.

ராஜஸ்தான் தரப்பில் யாஷ் பஞ்சா 2 விக்கெட்டுகளும், ஆர்ச்சர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ராஜஸ்தான் 221 ரன்களை இலக்காக கொண்டு விளையாட உள்ளது. இப்போட்டியில் தோல்வி அடைந்தால் ராஜஸ்தான் ஃபிளே ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com