இஷான் அரைசதம்... ராஜஸ்தானுக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஹைதராபாத்!

217 இலக்காக கொண்டு பேட்டிங் செய்யவுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இஷான் அரைசதம்... ராஜஸ்தானுக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஹைதராபாத்!
Published on

ஐபிஎல் 2026 தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு 217 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அணியின் கேட்பன் இஷான் கிஷான் 91 ரன்களும், கிளாசன் 40 ரன்களும் எடுத்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும், சந்தீப் ஷர்மா, துஷார், ரியான் பராக் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். தொடர்ந்து ராஜஸ்தான் விளையாட உள்ளது. ராஜஸ்தான் இதுவரை விளையாடி உள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றிப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிப்பதால் இப்போட்டியிலும் வெற்றிப் பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால், ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட ஹைதரபாத் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com