IPL 2026 | அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி..! ஐதராபாத் அணிக்கு எதிராக 228 ரன்கள் குவித்த ராஜஸ்தான்

டாஸ் சுண்டப்பட்டதில் ஐதராபாத் அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
IPL 2026 | அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி..! ஐதராபாத் அணிக்கு எதிராக 228 ரன்கள் குவித்த ராஜஸ்தான்
Published on

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் 3வது இடத்திலும், ஐதராபாத் அணி 4வது இடத்திலும் நீடிக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஐதராபாத் அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து, ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

இதில் அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ரன்களை குவித்தார். தொடர்ந்து, துருவ் ஜூரெல் 51 ரன்கள், டொவோவன் ஃபெரைரா 33 ரன்கள், ஷிம்ரான் ஹெட்மைர் 11 ரன்கள், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10, ரியான் பராக் 7 ரன்கள், ஜடேஜா 4 ரன்கள், ஜோப்ரா அர்செர் 2 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் குவித்தது.

தொடர்ந்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com