ஐபிஎல் 2026: ராஜஸ்தானுக்கு எதிராக பந்துவீசும் கொல்கத்தா!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு.
ஐபிஎல் 2026: ராஜஸ்தானுக்கு எதிரான பந்துவீசும் கொல்கத்தா
Published on

2026 ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 28வது லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்த்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுகிறது.

ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இச்சூழலில் ராஜஸ்தான் மீண்டும் முதலிடத்தை தக்கவைக்கவும், கொல்கத்தா முதல் வெற்றியைப் பதிவு செய்யவும் தீவிரம் காட்டும். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

ராஜஸ்தான் பிளேயிங் லெவன்

யஜஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்சி, த்ருவ் ஜுரேல் (விகீ), ரியான் பராக் (கேப்டன்), சிம்ரன் ஹெட்மயர், டொனொவன் ஃபெரேரா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர்,ரவி பிஷ்னோய், நாந்த்ரே பர்கர், ப்ரிஜெஷ் சர்மா

கொல்கத்தா பிளேயிங் லெவன்

அஜின்கியா ரகானே, டிம் சீஃபர்ட், கேமரூன் க்ரீன், ரோவ்மன் பவல், ரிங்கு சிங், அனுகுல் ராய், ரமன்தீப் சிங், சுனில் நரைன், கார்த்திக் தியாகி, வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com