ஐபிஎல் 2026: எலிமினேட்டர் சுற்று - ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

நடப்பாண்டின் இரண்டு லீக் போட்டியிலும் ராஜஸ்தானை ஹைதராபாத் வீழ்த்தியிருந்தது.
ஐபிஎல் 2026: எலிமினேட்டர் சுற்று - ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
Published on

2026 ஐபிஎல் தொடரின் பரபரப்பான 'எலிமினேட்டர்' சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. இப்போட்டியில் வெல்லும் அணி அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான 'தகுதிச்சுற்று 2'க்கு தகுதிபெற்று, அதில் குஜராத் அணியை எதிர்கொள்ளும். தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று 1-ல் பெங்களூருவை எதிர்கொண்ட குஜராத் அணி தோல்வியை சந்தித்தது. இதில் வெற்றிப்பெற்றதன் மூலம் பெங்களூரு நேரடியாக இறுதிச்சுற்றுக்கு சென்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை மோதியுள்ளன. இதில் ஹைதராபாத் 14 முறையும், ராஜஸ்தான் 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த வருட லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட இரண்டு போட்டிகளிலுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com