IPL 2026 | சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா சென்னை அணி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IPL 2026 | சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
Published on

ஐ.பி.எல் 2026-ன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுது பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள 3 இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

இன்று சென்னை சேப்பாக்கில் நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் மகேந்திர சிங் தோனி இந்த போட்டியில் களமிறங்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த போட்டியில் விளையாடிய குர்ஜப்னீத் சிங்கிற்கு மாற்றாக அகீல் ஹுசைன் களம் இறங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com