ஜோஸ் பட்லர் அதிரடி சதம்... கொல்கத்தா அணிக்கு எதிராக 217 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக அடி சதம் விளாசினார்.
ஜோஸ் பட்லர்
ஜோஸ் பட்லர்
Published on

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிறகு 217 ரன்கள் குவித்தது. துவக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் அதிரடியாக அடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 59 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்சர்களுடன் சதம் விளாசிய அவர், 103 ரன்களில் ஆட்டமிழந்தார். 

தேவ்தத் படிக்கல் 24 ரன், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹெட்மயர் 13 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார். 

கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட் எடுத்தார். பேட் கம்மின்ஸ், ரஸ்ஸல், சிவம் மவி தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com