கொல்கத்தா அணிக்கு 153 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 49 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 54 ரன்கள் சேர்த்தார்.
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்
Published on

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். ஜாஸ் பட்லர் 22 ரன்களும், ரியான் பராக் 19 ரன்களும் சேர்த்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹெட்மயர், 13 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 27 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.

கொல்கத்தா தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட் கைப்பற்றினார். உமேஷ் யாதவ், அனுகுல் ராய், ஷிவம் மவி தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com