ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 கணக்கில் கைப்பற்றிய இந்தியா!

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 கணக்கில் கைப்பற்றிய இந்தியா!
Published on

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

லக்னோவில் உள்ள ஏகானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 402 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 154 ரன்களும், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 125 ரன்களும் குவித்தனர். அர்ஷ்தீப் சிங் மற்றும் குர்னூர் பிரார் தலா 3 விக்கெட்டுகளையும், பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

பின்னர் 403 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹ்மத் ஷா அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. முன்னதாக தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com