மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா

மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் இருந்ததால் ரசிகர்கள் அவரை சரியாக பார்க்க முடியவில்லை. மேலும் அவர் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.
மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா
Published on

அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் இருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை.

மேலும் அவர் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்நிலையில் நிர்வாக குறைபாடு காரணமாக நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

சால்ட் லேக் மைதானத்தில் இன்று நடந்த நிர்வாகக் குறைபாட்டுக்கு நான் மிகவும் வருத்தமடைந்து அதிர்ச்சியடைந்துள்ளேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com