

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவின் மியாமி மைதானத்தில் இன்று அதிகாலை நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்திலேயே பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்து அதிரடி காட்டினார்.
புள்ளிக் கணக்கு 1-0 என்றிருக்க முதல் பாதி, வேறு யாரும் கோல் அடிக்கலாமல் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பாதியின் 3வது நிமிடத்தில் அதாவது ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் மற்றொரு கோலை ஸ்கோர் செய்ய புள்ளிக் கணக்கு 2-0 என்றானது.
பின்னர் 60வது நிமிடத்தில் மற்றொரு பிரேசில் வீரர் மேத்யூஸ் குன்ஹா கோல் அடிக்க, ஆட்ட முடிவில் 3-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தை பிரேசில் காலி செய்தது.