பாலியல் துன்புறத்தல் வழக்கில் கால்பந்து வீரருக்கு 8.5 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அந்த நேரத்தில் அவர் அதே பெயரை கொண்ட கால்பந்து கிளப்பிற்காக விளையாடி வந்தார்.
பாலியல் துன்புறத்தல் வழக்கில் கால்பந்து வீரருக்கு 8.5 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Published on

ஸ்பெயின் கால்பந்து வீரர் ரஃபா மிர், மற்றொரு வீரருடன் சேர்ந்து இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக, 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வலென்சியா பிராந்தியத்தில் உள்ள ஒரு கீழ் நீதிமன்றம் நேற்று (திங்கள் கிழமை) வழங்கிய தீர்ப்பில், மிர் மற்றும் மற்றொரு வீரர், 2024-ஆம் ஆண்டில் வலென்சியா நகரில் உள்ள மிர்ரின் வீட்டில் இரண்டு பெண்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்; அந்த நேரத்தில் அவர் அதே பெயரை கொண்ட கால்பந்து கிளப்பிற்காக விளையாடி வந்தார்.

சிறை தண்டனை:

பாலியல் வன்கொடுமைக்காக ஏழு ஆண்டுகளும், உடல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியதற்காக மேலும் 18 மாதங்கள் என மிர்ருக்கு மொத்தம் 8.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

28 வயதான மிர், கடந்த சீசனில் செவில்லா அணியில் இருந்து லா லிகாவில் எல்.சே. அணிக்காக விளையாடினார். எல்.சே. அணியுடனான அவரது ஒப்பந்தம் இந்த மாத இறுதியில் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுப்பு:

நீதிமன்ற ஆவணங்களில் பாப்லோ ஜே.ஜி என அடையாளம் காணப்பட்ட இரண்டாவது வீரர், ஸ்பெயினில் கீழ்நிலைப் பிரிவில் விளையாடும் வீரர் ஆவார். பாலியல் வன்கொடுமை மற்றும் உடல்ரீதியான தீங்கு விளைவித்த குற்றங்களுக்காக நீதிமன்றம் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

அந்த இரு பெண்களும் தன்னுடன் பாலியல் உறவு கொள்ள சம்மதித்ததாகக் கூறி, மிர் எந்தத் தவறும் செய்யவில்லை என மறுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com