

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறின.
தற்போது இந்த சுற்றில் வெற்றிபெற்ற அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழைந்த அணிகளின் விவரம் வருமாறு:
பராகுவே, பிரான்ஸ், கனடா, மொராக்கோ, போர்ச்சுகல், ஸ்பெயின், அமெரிக்கா, பெல்ஜியம், பிரேசில், நார்வே, மெக்சிகோ, இங்கிலாந்து, அர்ஜெண்டினா, எகிப்து, சுவிட்சர்லாந்து, கொலம்பியா ஆகிய அணிகள் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மோதும் அணிகள் எவை எவை தெரியுமா?
பராகுவே vs பிரான்ஸ்
கனடா vs மொராக்கோ
போர்ச்சுகல் vs ஸ்பெயின்
அமெரிக்கா vs பெல்ஜியம்
பிரேசில் vs நார்வே
மெக்சிகோ vs இங்கிலாந்து
அர்ஜெண்டினா vs எகிப்து
சுவிட்சர்லாந்து vs கொலம்பியா
ரவுண்ட் ஆப் 16 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். காலிறுதியில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
அதன்பின், அரையிறுதி சுற்றில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறும் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் கனடா, மொராக்கோ அணிகள் மோதவுள்ளன. நாளை அதிகாலை 2.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பராகுவே, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.