Football | மான்செஸ்டர் சிட்டி அணியிலிருந்து வெளியேறுகிறார் பெப் கார்டியோலா

பெப் கார்டியோலா கடந்த 2016-ம் ஆண்டில் மான்செஸ்டர் சிட்டி அணியுடன் இணைந்தார்
Football | மான்செஸ்டர் சிட்டி அணியிலிருந்து வெளியேறுகிறார் பெப் கார்டியோலா
Published on

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கிளப்களில் பிரபலமானது மான்செஸ்டர் சிட்டி அணி. இதன் தலைமை பயிற்சியாளராக பெப் கார்டியோலா இருந்து வருகிறார்.

இந்நிலையில், மான்செஸ்டர் சிட்டி அணியில் இருந்து பெப் கார்டியோலா வெளியேறுகிறார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டில் மான்செஸ்டர் சிட்டியுடன் இணைந்தார் கார்டியோலா. இவரது தலைமையின் கீழ் மான்செஸ்டர் அணி 6 முறை பிரிமியர் லீக் பட்டத்தையும், 3 முறை எப்.ஏ. கோப்பையையும், 5 முறை லா லிகா கோப்பையையும், ஒருமுறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது.

மான்செஸ்டர் சிட்டி அணியால் கடந்த இரு சீசனிலும் பிரிமியர் லீக் பட்டத்தை பெற முடியவில்லை.

பிரீமியர் லீக் தொடரின் கடைசி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி, அஸ்டோன் வில்லா அணியுடன் நாளை மறுதினம் மோதுகிறது. இதுவே பெப் கார்டியோலாவின் கடைசி போட்டி ஆகும்.

இதுதொடர்பாக பெப் கார்டியோலா கூறுகையில், எதுவுமே நிலையானது அல்ல. அப்படியிருந்தால் நான் இங்கேயே இருக்கலாம். ஆனாலும், இந்த உணர்வு, இங்குள்ள மக்கள், நினைவுகள், மான்செஸ்டர் சிட்டிமீது நான் கொண்டுள்ள அன்பு ஆகியவை என்றென்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com