

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன.
இதில் அமெரிக்காவின் அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற இன்றைய 'சி' பிரிவு லீக் போட்டியில் மொராக்கோ - ஹைதி அணிகள் மோதின.
போட்டியின் 10-வது நிமிடத்தில் ஹைதி வீரர் யாசின் பவ்னவ் முதல் கோலை அடித்தார். மொராக்கோ வீரர் அச்ரப் ஹகீமி 39-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.
ஆனால் 43-வது நிமிடத்தில் ஹைதியின் வில்சன் இசிடோர் அணியின் 2வது கோலை ஸ்கோர் செய்ய கணக்கு 2-1 என வந்து நின்றது.
மொராக்கோ சார்பில் 46-வது நிமிடத்தில் இஸ்மாயில் சாய்பாரி, 78-வது நிமிடத்தில் சவுபியான் ரகீமி, 89-வது நிமிடத்தில் கெஸ்சிம் யாசின் தலா இரு கோல் அடித்து ஹைதியை 4-2 கணக்கில் மட்டுப்படுத்தி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.