

அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கால்பந்தில் மெஸ்சி, மியாமி அணிக்காக விளையாடி வருகிறது. மியாமி அணி ஆஸ்டின் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி டிராபில் முடிவடைந்தது.
ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் ஆஸ்டின் வீரர் பிரோ கோல் அடித்து மியாமி அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இதற்கு பதிலயாக அடுத்த 4-வது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் மெஸ்சி கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது.
2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும், ஆஸ்டின் அணியின் ஜெய்டன் நெல்சல் கோல் அடித்தார். இதனால் ஆஸ்டின் 2-1 முன்னிலைப் பெற்றது. பின்னர் லூயிஸ் சுராஸ் 82-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் மியாமி 2-2 என போட்டியை சமன் செய்தது.
மியாமி வீரர்கள் 19 ஷாட்ஸ்கள் அடித்தனர். இதில் 4 ஷாட்ஸ் ஆன் டார்கெட் ஆகும். ஆஸ்டின் வீரர்கள் 6 ஷாட்ஸ் அடித்தனர். இதில் 3 ஷாட்ஸ் ஆன டார்கெட் ஆகும். பந்து 61 சதவீதம் மியாமி வீரர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அவர்கள் 509 பாஸ் செய்தனர். ஆஸ்டின் வீரர்கள் 186 பாஸ் செய்தனர். மியாமி வீரர்கள் 2 மங்சள் அட்டை பெற்றனர். மியாமிக்கு 7 கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்டினுக்கு 3 வாய்ப்பு கிடைத்தது.