கார் விபத்தில் பிரபல போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா பலி

லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர்.2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.
கார் விபத்தில் பிரபல போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா பலி
Published on

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரேவின் மறைவுக்குப் பிறகு போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளது.

கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com