1-1: டிராவில் முடிந்த ஜப்பான் - ஸ்வீடன் ஆட்டம் | FIFA 2026

முதல் பாதியில் யாரும் கோல் ஸ்கோர் செய்யவில்லை.
1-1: டிராவில் முடிந்த ஜப்பான் - ஸ்வீடன் ஆட்டம் | FIFA 2026
Published on

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன.

டல்லாஸ் மைதானத்தில் நடந்த 'எப்' பிரிவு லீக் ஆட்டத்தில் ஜப்பானுடன் ஸ்வீடன் அணி மோதியது.

இரு அணிகளும் டிபன்ஸ் மோடிலேயே விளையாடியதால் ஆட்டத்தின் முதல் பாதியில் யாரும் கோல் ஸ்கோர் செய்யவில்லை.

இரண்டாம் பாதியில் 56வது நிமிடத்தில் ஜப்பான் தனது முதல் கோலை பதிவு செய்தது.

அடுத்த சில நிமிடங்களில், அதாவது ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் ஸ்வீடனும் ஒரு கோலை பதிவு செய்ய ஆட்டம் 1-1 என வந்து நின்றது.

இதன் பின் இரு அணியும் மற்றொரு கோலுக்காக மெனக்கிட்டபோதும் முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. நீண்ட போரத்தின் பின் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கிலேயே டிராவில் முடிந்தது

X

Maalai Malar
www.maalaimalar.com