உலகக் கோப்பை கால்பந்து: துனீசியாவை 4-0 என சுருட்டியது ஜப்பான்

முதல் பாதி முடிவில் ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது.
japan
Published on

23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் நடந்து வருகிறது.

இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ‘எப்’ பிரிவில் உள்ள ஜப்பான், துனீசியா அணிகள் மோதின.

தொடக்கத்தில் இருந்தே ஜப்பான் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினார்கள். ஆட்டத்தின் 4, 31 வது நிமிடங்களில் ஜப்பான் வீரர்கள் கோல் அடித்தனர்.

முதல் பாதி முடிவில் ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 69, 83 வது நிமிடங்களில் ஜப்பான் வீரர்கள் கோல் அடித்தனர்.

இறுதியில், ஜப்பான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com