U20 பெண்கள் ஆசிய கோப்பையில் 2004-க்குப் பிறகு முதல் வெற்றியை பெற்ற இந்தியா..!

20 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 2004-க்குப் பிறகு முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளது
U20 பெண்கள் ஆசிய கோப்பையில் 2004-க்குப் பிறகு முதல் வெற்றியை பெற்ற இந்தியா..!
Published on

AFC 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான ஆசிய கோப்பை 2026 நாக்அவுட் ஸ்டேஜ் போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி இன்று சீன தைஃபே அணியை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 என வெற்றி பெற்றது.

இந்திய வீராங்கனை சிபானி தேவி நோங்மெய்கபம் 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பின் 87-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தியும் கோல் அடித்தார். பூமிகா தேவி குமுக்சம் 26-வது நிமிடத்தில் கோல் அடித்தார். சீனா தைஃபையேின் கயோ ஹ்சின் (90+3) கோல் அடித்தார்.

2004-க்குப் பிறகு AFC U20 பெண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியா முதல் வெற்றியை பெற்றுள்ளது.

குரூப் சி அணியில் இந்தியா 3-வது இடம் பிடித்துள்ளது. மூன்று பிரிவுகளில் இருந்து முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி காலிறுதிக்கு முன்னேறும். மீதமுள்ள அணிகளில் சிறந்த இரண்டு அணிகள் காலிறுக்கு முன்னேறும். அப்படி இருந்தும் இந்தியாவால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. வியட்நாம், உஸ்பெகிஸ்தான் அணிகள் முன்னேறின.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com