பிபா உலக கோப்பையில் ஏமாற்றம்: ஜெர்மனி பயிற்சியாளர் ராஜினாமா

ரவுண்ட்ஆஃப் 32 சுற்றில் பராகுவேவுக்கு எதிரான போட்டி 1-1 என டிராவில் முடிந்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
ஜெர்மனி கால்பந்து அணி பயிற்சியாளர் ஜூலியன் நகெல்ஸ்மான்
ஜெர்மனி கால்பந்து அணி பயிற்சியாளர் ஜூலியன் நகெல்ஸ்மான்
Published on

பிபா உலக கோப்பை ரவுண்டாப் ஆஃப் 32 சுற்றில் பராகுவே அணிக்கெதிராக 1-1 என டிரா செய்த ஜெர்மனி, பெனால்டி ஷூட் அவுட்டில் 3-4 எனத் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் 48 அணிகள் பங்கேற்ற பிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளின் அடிப்படையில் 32 அணிகள் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு முன்னேறின. இது நாக்அவுட் சுற்றாகும்.

பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வி

இதில் ஜெர்மனி பராகுவேவை எதிர்கொண்டது. போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமன் பெற்றிருந்ததால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-4 எனத் தோல்வியை சந்தித்தது. இதனால் தொடரில் இருந்து வெளியேறியது.

ஜூலியன் நகெல்ஸ்மான் ராஜினாமா

இதனால் ஜெர்மனி கால்பந்து பெடரேசன், பயிற்சியாளர் ஜூலியன் நகெல்ஸ்மான்-ஐ பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்க முடிவு செய்தது. இந்த நிலையில் ஜூலியன் நகெல்ஸ்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உலக கோப்பையில் பங்கேற்ற 48 அணிகளின் பயிற்சியாளர்களில் அதிக சம்பளம் பெற்ற பயிற்சியாளரர் ஜூலியன் நகெல்ஸ்மான் தான். இன்னும் இரண்டு வரும் ஜெர்மனி அணியின் பயிற்சியாளராக நீடிப்பேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தனது பதவியை ராஜினாாமா செய்துள்ளா்.

அணித்தேர்வு மற்றும் டேக்டிக்ஸ் ஆகியவை குறித்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

ஜுர்கென் க்ளோப்

லிவர்பூல் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஜுர்கென் க்ளோப் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

குரூப் சுற்று

குரூப் சுற்றில் ஜெர்மனி E குரூப்பில் இடம் பிடித்திருந்தது. 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி, ஒரு தோல்வி மூலம் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. ஐவரி கோஸ்ட் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி மூலம் கோல்கள் வித்தியாசம் அடிப்படையில் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்ததிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈகுவடாரிடம் 1-2 எனத் தோல்வியடைந்திருந்தது. கோர்சாவ் அணியை 7-1 என வீழ்த்தியிருந்தது. ஐவரி கோஸ்ட் அணியை 2-1 என வீழ்த்தியிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com