

பிஃபா உலக கோப்பை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் காலை வரை 4 போட்டிகள் நடைபெற்றன.
அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் எல் பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து- பனமா நாடுகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இங்கிலாந்து 2-0 என பனமாவை வீழ்த்தியது. ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
62-வது நிமிடத்தில் பெலிங்காம் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 5-வது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து 2-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணிகளாலும் வெற்றி பெற முடியவில்லை. இதனால் இங்கிலாந்து 2-0 என பனமாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி, ஒன்றில் டிராவி மூலம் 7 புள்ளிகள் பெற்று எல் பிரிவில் முதல் இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து வீரர் ஒருவரும், பனமா வீரர் இருவரும் மஞ்சள் அட்டை பெற்றனர்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் குரோசியா- கானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் குரோசியா 2-1 என வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 31-வது நிமிடத்தில் குரோசியாவின் பீட்டர் சுசிச் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் முதல்பாதி நேர ஆட்டம் வரை இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் கானாவின் டெரிக் லூக்காசென் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என ஆனது. ஆனால், அடுத்த 10-வது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் நிகோலா விளாசிக் கோல் அடித்தார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் குரோசியா 2-1 என வெற்றி பெற்றது.
எல் பிரிவில் இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. குரோசியா 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. கானா 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. பனமாக வெற்றி ஏதும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. முதல் இரண்டு அணிகளும் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறின. நாக்அவுட் சுற்றில் இங்கிலாந்து காங்கோவையும், குரோசியா போர்ச்சுக்கலையும் எதிர்கொள்கின்றன.
அதிகாலை 5.30 மணிக்கு இரண்டு போட்டிகள் நடைபெற்றன. கே பிரிவில் இடம் பிடித்துள்ள பலமான கொலம்பியா- போர்ச்சுக்கல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆனால் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி கோல்கள் ஏதுமின்றி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியில் போர்ச்சுக்கலை விட கொலம்பியாவின் கையே ஓங்கியிருந்தது. அந்த அணி கோல் எல்லையை நோக்கி 26 Shots அடித்தனர். ஆனால் போர்ச்சுக்கல் 13 Shots மட்டுமே அடித்தனர். இதில் கொலம்பியாவின் Shots on Target 6 ஆகும். போர்ச்சுக்கலின் Shots on Target 2 மட்டுமே ஆகும்.
மற்றொரு ஆட்டத்தில் காங்கோ- உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இதில் காங்கோ 3-1 என வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தானின் எல்டர் ஷோமுரோடோவ் கோல் அடித்தார். அதன்பின் முதல் பாதியில் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. 2-வது பாதி நேரத்திலும் நீண்ட நேரம் கோல் அடிக்க முடியவில்லை. 68-வது நிமிடத்தில் யோவான் விஸ்சா பொனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். 78-வது நிமிடத்தில் காங்கோ அணிக்கு மேலும் ஒரு கோல் கிடைத்தது. பிஸ்டன் மயேலே கோல் அடித்தார். இதனால் காங்கோ 2-1 என முன்னிலைப் பெற்றது. 90 நிமிட ஆட்டம் முடிவடைந்தபின்னர், Injury நேரம் வழங்கப்பட்டது. அதில் 91-வது நிமிடத்தில் விஸ்சா மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் காங்கோ 3-1 என வெற்றி பெற்றது.
கே பிரிவில் கொலம்பியா 2 வெற்றி, ஒரு டிரா மூலம் 7 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. போர்ச்சுக்கல் 1 வெற்றி, இரண்டு டிரா 5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. காங்கோ 3-வது இடத்தையும், உஸ்பெகிஸ்தான் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.
நாக்அவுட் சுற்றில் போர்ச்சுக்கல் குரோசியாவையும், கொலம்பியா கானாவையும் எதிர்கொள்கின்றன.