உலகக் கோப்பை கால்பந்து: குளோஸ் சாதனையை சமன் செய்த எம்பாப்வே

ஈராக்குக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்சின் நட்சத்திர வீரர் எம்பாப்வே 2 கோல்கள் அடித்தார்.
embappe
Published on

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் பிலடெல்பியா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 2.30 மணிக்கு நடைபெற்ற 'ஐ' பிரிவு லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், ஈராக் அணிகள் மோதின.

இதில் பிரான்ஸ் அணி 3-0 என ஈராக் அணியை வென்றது.

இந்நிலையில், ஈராக்குக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்சின் நட்சத்திர வீரர் எம்பாப்வே 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் உலகக் கோப்பையில் அவரது கோல் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. அவர் குளோசை சமன் செய்தார். அதே நேரத்தில் ரொனால்டோவை முந்தினார். குளோசும், எம்பாப்வேயும் மெஸ்சிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com