உலகக் கோப்பை கால்பந்து: சவுதி அரேபியா - உருகுவே அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 கணக்கில் டிரா

ஆட்டத்தின் 80-ஆவது நிமிடத்தில் உருகுவே அணி தனது முதல் கோலை அடித்தது.
உலகக் கோப்பை கால்பந்து: சவுதி அரேபியா - உருகுவே அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 கணக்கில் டிரா
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் க்ரூப் H-இல் இடம்பெற்றுள்ள சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகள் மோதின. மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உருகுவே ஆதிக்கம் அதிகரித்து காணப்பட்டது. எனினும், போட்டி கடைசி வரை பரபரப்பு குறையாமல் இருந்தது.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய உருகுவே அணி கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியது. மறுப்பக்கம் சவுதி அரேபியா அணியும் தன் பங்கிற்கு கோல் அடிக்கும் முயற்சியில் துளியும் தாமதம் காட்டவில்லை.

இதற்கு பலனளிக்கும் வகையில், போட்டியில் 41-ஆவது நிமிடத்தில் அப்துல்லா அல்-அம்ரி அசத்தல் முயற்சி காரணமாக சவுதி அரேபியா தனது முதல் கோலை பெற்றது.

ஆட்டத்தின் முதல் பாதி வரை சவுதி அரேபியா முன்னிலை பெற இரண்டாம் பாதியில் உருகுவே அணி கோல் அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு பரபரப்பை கூட்டியது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் உருகுவே அணி தனது வீரர்களை மாற்றுவதில் தீவிரம் காட்டியது.

இதற்கு பலனளிக்கும் வகையில் ஆட்டத்தின் 80-ஆவது நிமிடத்தில் உருகுவே அணி தனது முதல் கோலை அடித்தது. இதனால் போட்டி சமனுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து இரு அணிகளும் வெற்றியை உறுதிப்படுத்தும் இரண்டாவது கோலை அடிக்கும் முயற்சியில் இறங்கின. எனினும், இரு அணிகளும் வெற்றிக்கான கோல் அடிக்கவில்லை. இதனால் போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com