

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடந்த லீக் சுற்று ஆட்டத்தில் க்ரூப் G சுற்றில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் மோதின. சியாட்டில் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டி நடந்தது. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர்.
எகிப்து முன்னிலை:
இதில் எகிப்து அணி முதலில் ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 20-ஆவது நிமிடத்தில் எகிப்து அணியின் சலாஹ் வழங்கிய அசிஸ்ட்-ஐ சரியாக பயன்படுத்திக் கொண்ட எமாம் அஷௌர் கோல் அடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதி வரை பெல்ஜியம் அணி கோல் அடிக்கும் முயற்சி அந்த அணிக்கு பலன்தரவில்லை. இதனால், முதல் பாதி ஆட்டம் வரை 0-1 என்ற கணக்கில் எகிப்து அணி முன்னிலையில் நீடித்தது.
சமனிலை:
பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது பாதியில் பெல்ஜியம் அணி அடுத்தடுத்து மூன்று வீரர்களை மாற்றியது. சப்ஸ்ட்யூட் மாற்றம் பெல்ஜியம் அணிக்கு பலன் கொடுத்தது. ஆட்டத்தின் 66-ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் முகமது ஹானி கோல் அடிக்க இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனிலை அடைந்தன.
இதைத் தொடர்ந்து ஆட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்க இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டின. எனினும், இரு அணிகளாலும் ஒரு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.