

பிஃபா உலக கோப்பை கால்பந்தில் இன்று காலை நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 32 நாக்அவுட் சுற்று போட்டியில் ஜான் ஆரியாஸ் கோலால் கொலம்பியா 1-0 என கானாவை வீழ்த்தி அடுத்த சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பிஃபா உலக கோப்பை கால்பந்து அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. ரவுண்ட் ஆஃப் 32 பிரிவில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற போட்டியில் கொலம்பியா- கானா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 14-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் ஜான் ஆரியாஸ் கோல் அடித்தார். இதனால் கொலம்பியா 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேர ஆட்டத்திலும் இரு அணிகளாலும் கோல் அடிக்கவில்லை. இதனால் கொலம்பியா 1-0 என வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16-க்கு (காலிறுதிக்கு முந்தைய சுற்று) முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் கொலம்பியா அணியே ஆதிக்கம் செலுத்தியது என்று சொல்லலாம். கோல் அடிக்கும் முயற்சியில் 20 ஷாட்ஸ் கள் அடித்தனர். அதேவேளையில கானா 8 ஷாட்ஸ்தான் அடித்தன.
சரியாக கோல் பகுதியை நோக்கி (Shots on Target) 8 ஷாட்ஸ் அடித்தனர். இதில் ஒன்று மட்டுமே கோலாக மாறியது. மற்றவை தடுக்கப்பட்டன. அதேவேளையில் கானா அணியால் ஒரு ஷாட் கூட கோல் பகுதியை எட்டும் வகையில் அமையவில்லை. 62 சதவீதம் பந்து கொலம்பியா வீரர்கள் கால் அவசமே இருந்தது. அவர்கள் மொத்தமாக 576 பாஸ் செய்தனர். கானா வீரர்களின் பாஸ் எண்ணிக்கை 349 ஆகும். கொலம்பியாவைச் சேர்ந்த 2 வீரர்களுக்கும், கானாவைச் சேர்ந்த 3 வீரர்களுக்கும் மஞ்சள் அமட்டை வழங்கப்பட்டது. கொலம்பியா அணிக்கு 3 கார்னர் வாய்ப்புகளும், கானா அணிக்கு 2 கார்னர் வாய்ப்புகளும் கிடைத்தன.
காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கொலம்பியா சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. இதற்கு முந்தைய போட்டியில் அர்ஜென்டினா கேப் வெர்டேவை 3-2 என வீழ்த்தியது.
குரூப் சுற்றில் கொலம்பியா கே பிரிவில் இடம் பிடித்திருந்தது. இதே அணியில் போர்ச்சுக்கல், காங்கோ, உஸ்பெகிஸ்தான் அணிகள் இடம் பிடித்திருந்தன. இதில் கொலம்பியா 2 வெற்றி, ஒரு டிரா மூலம் 7 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது.