

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆட்டம் சியாட்டிள் மைதானத்தில் நடைபெற்றது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பர்கெஸ் ஓன் கோல் காரணமாக அமெரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 11-ஆவது நிமிடத்திலேயே அமெரிக்க அணி ஒரு கோலுடன் கணக்கை தொடங்கியது.
தொடர்ந்து ஆட்டத்தின் 43-ஆவது நிமிடத்தில் அமெரிக்க அணி வீரர் அலெக்ஸ் ஃப்ரீமேன் தனது அணிக்கு முதல் கோலை அடிக்க அமெரிக்க அணி 2-0 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியும் கோல் அடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டது.
எனினும், கோல் அடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. ஆட்டத்தின் இறுதியில் அமெரிக்க அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.