உலகக் கோப்பை கால்பந்து: உருகுவே மற்றும் கபோ வெர்டெ இடையிலான ஆட்டம் டிரா

இரு அணிகள் இடையிலான போட்டி மியாமி மைதானத்தில் நடந்தது.
உலகக் கோப்பை கால்பந்து: உருகுவே மற்றும் கபோ வெர்டெ இடையிலான ஆட்டம் டிரா
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் சுற்றில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த போட்டியில் உருகுவே மற்றும் கபோ வெர்டெ அணிகள் மோதின. க்ரூப் H-இல் இடம்பெற்றுள்ள இந்த இரு அணிகள் இடையிலான போட்டி மியாமி மைதானத்தில் நடந்தது.

ஆட்டம் தொடங்கயதில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடும் முயற்சியில் இறங்கினர். ஆட்டத்தின் 21-ஆவது நிமிடத்தில் கபோ வெர்டெ அணியின் மிட் ஃபீல்டர் கெவின் பினா அசத்தலாக கோல் அடிக்க அந்த அணி 0-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆட்டத்தின் 44-ஆவது நிமிடத்தில் உருகுவே அணியின் மிட் ஃபீல்டர் மேக்சிமிலானோ தனது அணிக்கு கோல் அடிக்க ஆட்டத்தில் 1-1 என சமநிலை உருவானது.

45-ஆவது நிமிடத்தில் உருகுவே அணியின் மேக்சி அரௌஜோ அசிஸ்ட்-ஐ சரியாக பயன்படுத்திக் கொண்ட அகஸ்டின் கனோபியோ தனது அணிக்கு கோல் அடிக்க உருகுவே அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதி வரை உருகுவே அணி முன்னிலையில் இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும் கபோ வெர்டெ அணியின் ஹீலியோ வரெலா தனது அணிக்கு கோல் அடிக்க ஆட்டம் 2-2 என்ற கணக்கில் மேலும் சூடுபிடித்தது. ஆட்டத்தின் கடைசி வரை சமநிலை தொடர்ந்த நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

டிராவை தவிர்க்க கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதிலும், இரு அணிகளாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டம் டிரா ஆனதை தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com